திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர், ஆகஸ்ட் 16.
79ஆவது சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித், ஐ.ஏ.எஸ்., மாநகர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மக்களுக்கும், மேலும் இதர துறை சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல முறையில் நற்பணி செய்து வந்ததற்காக, திருப்பூர் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் என். சண்முகசுந்தரம் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
சரவணக்குமார்,
திருப்பூர் மாவட்டம்