Fri. Aug 22nd, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா இன்று காலை மிகுந்த விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேளதாள ஒலியுடன் கூழ் வார்த்தல் வழிபாடும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சி மண்டல செயலாளர் பி. சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் மற்றும் நகர கழக செயலாளர் கைத்தறி காவலர் ரமேஷ் கலந்து கொண்டனர். புதிய நீதி கட்சியின் சார்பாக பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

இதில் ஊர் பிரமுகர்கள், ஆலய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

📍 இடம்: மோடி குப்பம், குடியாத்தம் வட்டம்
✍ செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS