தஞ்சாவூர், ஆக.10 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் ஏற்படாத வகையில், ஞாயிற்றுக்கிழமையன்றும் கொள்முதல் செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி இன்று (ஞாயிறு) மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் நடைபெற்றன.
அம்மையகரம் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக நெல் கொள்முதல் நடைபெற்றது. கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு சங்கம் நன்றியை தெரிவித்தது.
மேலும், ஒரு ஏக்கர் சான்றுக்கு தற்போது 60 சிப்பம் மட்டுமே வாங்கப்படுகின்றது; அதை 80–90 சிப்பமாக உயர்த்த வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்