நேற்று (07.08.2025) மாலை 7:30 மணியளவில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்து ஆதாரங்களுடன் கூடிய விரிவான விளக்கக்காட்சியை (Presentation) அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி, திருமதி பிரியங்கா காந்தி, திரு. மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் திரு. டி.ஆர். பாலு, திரு. திருச்சி சிவா, திருமதி கனிமொழி, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. கமல் ஹாசன், திரு. அப்துல் சமது MLA மற்றும் பிற மாநிலங்களின் தலைவர்களான திரு. சரத்பவார், திரு. உத்தவ் தாக்கரே, திரு. அகிலேஷ் யாதவ், திரு. ராம் கோபால் யாதவ், திருமதி மெஹபூபா முஃப்தி, திரு. பாருக் அப்துல்லா, திரு. டி. ராஜா, தெலுங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதலமைச்சர் திரு. சித்தராமையா, திருமதி சுப்ரியா சூலே, திருமதி ப்ரீயா தத்தா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன், மறுமலர்ச்சி திமுக சார்பில் நானும் பங்கேற்றேன்.
கூட்டத்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில், சக தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
இந்நிகழ்வில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அன்பு மாமா அப்துல் சமது அவர்களும் கலந்துகொண்டார். அவரை அழைத்துச் சென்று ராகுல் காந்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, என்னுடன் அருகில் அமரவைத்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தேன். நிகழ்வு முடிந்த பின்னர், அவரை வழியனுப்பி வைத்தேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
08.08.2025
புதுடெல்லி
DuraiVaiko #Vaiko #MDMK #trichymp #INDIAAlliance
K.A.மஸ்தான் – ஒன்றிய செயலாளர்
மறுமலர்ச்சி திமுக – மானூர் மேற்கு
நெல்லை மத்திய மாவட்டம்.
.