தென்காசி, ஆகஸ்ட் 8:
ஆயுதத் தாக்குதல்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைகள் மூலம் காஸாவில் இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் SDPI கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டிப்பதுடன், காஸாவிற்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க உலக நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்திற்கு நகர தலைவர் வழ. லுக்மான் ஹக்கீம் தலைமையேற்றார். நகர துணைத்தலைவர் ஷாகுல் ஹமீது, இணைச் செயலாளர் சைபுல்லா, பொருளாளர் அபுலைஸ், செயற்குழு உறுப்பினர் முகம்மது கனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத்தலைவர் முகம்மது நைனார், மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மக்மூத், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஷேக் முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர் சீனா, செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, தொகுதி தலைவர் ஹக்கீம் சேட், துணைத்தலைவர் நைனாமுகம்மது கனி, செயலாளர் ஷாஜித் அலி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட தலைவர் திவான் ஒலி, மாவட்ட பொருளாளர் யாசர் கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மனித சங்கிலியில், இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராகவும், காஸா மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நகர செயலாளர் நன்றி கூற, போராட்டம் நிறைவுற்றது.
தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜோ அமல்ராஜ்