Fri. Aug 22nd, 2025

தேர்தல் ஆணையத்தை நோக்கி அமைதி பேரணி சென்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் கைது – வன்மையான கண்டனத்திற்குரியது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தேர்தல் ஆணையம் நோக்கி அமைதியாகப் பேரணி சென்ற மக்களவை எதிர் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கன்டனத்திற்க்குரியதாகும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் பேரணி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது, நம் நாட்டில் ஜனநாயக மாண்புகள் சிதைந்து வருவதை வெளிப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் தேர்தல் ஆணையம், அனைத்து அரசியல் கருத்துகளையும் கவனமாகக் கேட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வது தனது கடமை என்பதை உணர வேண்டும்.

எதிர்மறை கருத்துக்களை ஒடுக்கி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நெருங்குவதை தடுப்பது, ஜனநாயக மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கின்றது. சட்டப்படி, அமைதியாக நடைபெறும் போராட்டங்களுக்கு அரசு இவ்வாறு கடுமையான அடக்குமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கும்.

ராகுல் காந்தி உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ்,
திமுக, உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து எம்.பி.களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறேன். தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு, தனது பிழைகளைத் திருத்திக் கொண்டு ஜனநாயகக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
11/08/2025

#mmkitwing #jawahirullahmla #VoteChori #ElectionCommissionOfIndia
#RahulExposesVoteChori #RahulGandhi #indiaallianceprotest

Tamilnadu Today – செய்திகளுக்காக,

இணை ஆசிரியர் – சேக் முகைதீன்.

By TN NEWS