Fri. Aug 22nd, 2025


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கைத்தறி அலுவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார், சரக கைத்தறி அலுவலர் ராஜா வரவேற்றார்
இதில்  சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு குத்து‌ விளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ் அரசு சுமதி மகாலிங்கம் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம் ஆஸ்துமா சக்கரை நோய் ரத்த அழுத்தம் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில்  300 கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS