வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேற்கு ஒன்றியம் சார்பில், முத்தமிழ் அறிஞர், செம்மொழி நாயகர், காலத்தை வென்ற காவியத் தலைவன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மா. கலைஞர் கருணாநிதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வின் போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் திருமதி வி. அமலு விஜயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மகளிர் அணிப் பிரச்சாரக் குழு செயலாளருமாகியவர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இதேபோலவே, கே. ரவி, குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்