தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்க் கனவு” நிகழ்ச்சி: கவிஞர் யுகபாரதி உரையாற்றினார்.
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கில், தமிழ் மரபும் பண்பாடும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்க் கனவு” எனும் மாபெரும் நிகழ்ச்சி, “மானுடம் போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று (06.08.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல திரைப்படக் கவிஞர் திரு. யுகபாரதி அவர்கள், தமிழ் மரபுகள், பண்பாடுகள் மற்றும் மனித நேயத்தின் முக்கியத்துவம் குறித்த பரபரப்பான உரையாற்றினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியப்பிரமுகர்கள்:
மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ. தியாகராஜன்
தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முனைவர் சி. அமுதா, முனைவர் பெ. பாரதஜோதி
பதிவாளர் திரு. கோ. பன்னீர்செல்வம்
வருவாய் கோட்டாட்சியர் திருமதி இலக்கியா
மேலும் பல கல்வி, பணியியல், மற்றும் அரசுத்துறை பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்