திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கட்டளை சொத்துக்கள் கடந்த 28 ஆண்டுகளாக தொழிலதிபர் BMS. முருகேசன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ் சரியான ஆவணங்களை இணைத்து புகார் மனுவை அளித்ததன் பின்னர், கோவில் நிர்வாகம் சார்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்துள்ளார்:
“இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவில் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உரிய சொத்துக்கள் விரைவில் திருக்கோவிலின் வசமாக மீட்கப்படும்.”
ராமர், செய்தியாளர்
திருச்சிராப்பள்ளி