Fri. Aug 22nd, 2025


இடம்: பல்லடம், திருப்பூர்
தேதி: 5 ஆகஸ்ட் 2025

இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மெட்ரோ கிளப்பில் அறம் அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற ஏகாதசி சொற்பொழிவு நிகழ்ச்சியில், “இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது.

இந்தச் சொற்பொழிவில், முன்னாள் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் மா. வெங்கடேசன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களின் சமகால சூழ்நிலைகள், உரிமைகள், அரசுத் திட்டங்கள், மற்றும் நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

நிகழ்ச்சி தொடக்கமாக, ஜாதிய அடிப்படையில் நிகழ்ந்த படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களையும் கேள்விகளையும் பகிர்ந்தனர்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.


R. சுதாகர்
துணை ஆசிரியர்

 

By TN NEWS