Fri. Aug 22nd, 2025

ஆகஸ்ட் 4
📍 வேலூர் மாவட்டம், குடியாத்தம்

குடியாத்தம் தாழையாத்தம் மாங்காளியம்மன் கோவில் தெருவில், 2022–2023ஆம் ஆண்டுக்கான 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் ₹5 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடம் முடிக்கப்பட்டு இரண்டாண்டுகளாக ஆகின்ற போதிலும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், குறிப்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, கட்டியதை முடித்து கழிவறை கட்டிடத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழையாத்தம் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி கேட்டுள்ளனர்.

✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்


 

By TN NEWS