Fri. Aug 22nd, 2025

நாமக்கல் மாவட்டம்:

நமது தேடல் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு சேவை புரியும் நாமக்கல் மாவட்ட முதன்மை செய்தியாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் செய்தி சேகரிக்கச் சென்றபோது, சில சமூக விரோதிகள் அவரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. தொடர்புடைய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை நடவடிக்கையில்லை எனில், எலச்சிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என நாமக்கல் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் திரு. முகிலன் அவர்கள் வலியுறுத்தி அறிவித்துள்ளார்.

📍சரவணக்குமார்
திருப்பூர் மாவட்டம்



 

By TN NEWS