ஆகஸ்ட் 4 – தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் சேவையை தனியார் கையாள்வோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, AITUC தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த தொடரில், தஞ்சாவூரில் ஜெபமாலைபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை 11:50 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசையும், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தையும் கண்டித்தனர்.
தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தனியார்மயமாக்கலை நிறுத்தவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
✍️ இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர் – தஞ்சாவூர்