அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜி. அசோக்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. செந்தில்முருகன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே. பி. இளங்கோ, அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே. பார்த்திபன், அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி. பி. வெங்கடேசன், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. முருகன், அரூர் நகர செயலாளர் பி. பெருமாள், தீரன் தொழிற்சங்க பேரவை கிளை தலைவர் பிரபாகரன், அரூர் கொங்குநாடு கலைக் குழு வள்ளி கும்மி செயலாளர் சியாமளாதேவி மணிவண்ணன், விஜியா கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட, ஒன்றிய, நகர, பஞ்சாயத்து, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலரும் மரியாதை செலுத்தினர்.
– செய்தியாளர் கோகுலகிருஷ்ணன்