Tue. Aug 26th, 2025

குடியாத்தம் பரதராமியில் கோவில் இடம் மீட்பு கோரி விசுவ ஹிந்து பரிஷத் மனு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அங்கனாம்பள்ளி பகுதியில் பல தலைமுறைகளாக ராமர் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த கோவில் பின்புறம் உள்ள இடத்தை விழா காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

சமீபத்தில், அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தகர சீட்டு அமைத்து, அது தனது சொந்தம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் அங்கனாம்பள்ளி பொதுமக்கள் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை மீண்டும் கோவில் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பில் மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் ரவி, ஒன்றிய நகர நிர்வாகிகள் சிதம்பரம், பிரபாகரன், ஆனந்தன், தர்மதுரை, புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS