அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா – விளையாட்டு போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வு.
சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) அரூர் கிளஸ்டர் சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு. கா. ஆன்டனி, கிராம வளர்ச்சி அலுவலர் திருமதி R. சோனியா மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சமுதாய வளர்ச்சி அலுவலர் பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சில நோய்கள் எதனால் பரவுகின்றன என்பதையும் எளிய முறையில் மக்களுக்கு விளக்கிக் கூறினார்.
மக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பாரம்பரிய உணவுகளை தயாரித்து கொண்டு வந்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பசுபதி – தலைமை செய்தியாளர்.