வேலூர் மாவட்டம் V.D.பாளையத்தில் 100 நாள் வேலை கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (30.07.2025) வேலூர் மாவட்டம் K.V.குப்பம் தொகுதி V.D.பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தோழர் P. விமலாபிச்சமுத்து (ஒ. தலைவர்) தலைமையில் நடத்தினார்.
விளக்க உரைகளை தோழர்கள் துரை செல்வம் (மு.மா.து. செயலாளர்), K.C. பிரேம்குமார் (வி.தொ), நா. பரமசிவம் (வி.தொ.ச. ஒன்றிய செயலாளர்), D. மணியரசன் (மா.து. தலைவர்), R. அக்பர் (மா.து.செ), G. முனிசாமி (ஒ.த), N. ஜீவானந்தம், ஆலியார் அத்தாவுல்லா (ந.து.செ), R. வேலாயுதம் (ஒ.து.செ), M. மேகநாதன், N. வில்வநாதன், ரீட்டா, புஷ்பா, குமாரி ஆகியோர் ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் 38 பெண்கள் உட்பட மொத்தம் 72 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், குடியாத்தம் B.D.O. அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
— குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: இராஜேந்திரன் ✔️