Wed. Aug 20th, 2025

ஜூலை 27 – சுரண்டை

சுரண்டை நகராட்சியில், தமிழ்நாடு அரசின் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்திட்டத்தின்படி, இன்று நகரின் பல பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு, சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும், வடிகால் பகுதிகள் சுத்தம் செய்யப்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டன.

நகராட்சி ஊழியர்கள், சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து, அதிகாலை முதலே துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மக்களிடமும் தூய்மையை பேணும் பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சுத்தம் – பாதுகாப்பான சூழல் என்ற செய்தியை மக்களிடம் பரப்பினர்.

சுரண்டை நகராட்சி சார்பில், தூய்மையை நிலைநிறுத்த தொடர்ந்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜோ.அமல்ராஜ்

தலைமை செய்தியாளர்

தென்காசி மாவட்டம்

 

By TN NEWS