Thu. Aug 21st, 2025


தென்காசி:

வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிதுரை, உடல்நிலை குறைவால் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார்கள்.

மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடாக இந்த செயலுக்காக மாவட்ட நிர்வாகம் அவருக்கு அரசு மரியாதையை அளித்து, அவரது நற்பணி குறித்து உரையாற்றியது.

இச்செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது குடும்பத்தினரை பலரும் நேரில் சந்தித்து பாராட்டியதுடன், இது மற்றவர்களுக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக சமூக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜோ.அமல்ராஜ்

முதன்மை செய்தியாளர்

தென்காசி மாவட்டம்.

By TN NEWS