Mon. Oct 6th, 2025


மாம்பாடி ஊராட்சி பள்ளியில் மரக்கன்று, உபகரண பெட்டி, இனிப்பு வழங்கல் – பா.ம.க மாநில துணைத் தலைவர் மா.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை தாயகம் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடவு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் அவர்களின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல், பள்ளி மாணவர்களுக்கு உபகரண பெட்டிகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த விழாவிற்கு பா.ம.க மாநில துணைத் தலைவர் மாம்பாடி மா.அன்பழகன் தலைமையாற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பா.ம.க வினர் பலர் பங்கேற்றனர்.

பசுபதி – தலைமை செய்தியாளர்.

By TN NEWS