Tue. Jul 22nd, 2025

சேலம், ஏப்ரல் 14:
அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் இன்று (14.04.2025) சேலம் அம்பேத்கர் சர்க்கிளில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம். செல்வகணபதி, மாநகராட்சி ஆணையாளர் திரு. இளங்கோவன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி அ. அபிநயா, வருவாய் வட்டாட்சியர் திரு. பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முஹம்மது – சேலம் மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS