தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச். தொட்டம்பட்டியில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறுபான்மை இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கே.ஏ.எஸ் மருத்துவமனை, ஜேசிஐ ஈரோடு இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பொன். பல ராமன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் மகப்பேறு, மகளிர் பிரச்சனைகள், எலும்பு மற்றும் பொது மருத்துவ ஆலோசனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக ஆதிதிராவிட நலக் குழு மாநில துணைச் செயலாளர் கேஸ். இராசந்திரன், விசிக சிறுபான்மை மாநில துணைச் செயலாளர் காதர்பாஷா, விசிக மகளிர் விடுதலை இயக்க மாவட்ட பொறுப்பாளர் சாக்கம்மாள், இந்திய குடியரசு நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜேந்திரன், குமரேசன், ஆர்பிஐ செயல் தலைவர் இரஜேந்திரன், மகாராணி, செயலாளர் செல்வம், பொருளாளர் பிரியதர்ஷினி, கிருத்திகா, ஆனந்தி, சக்திவேல், தீப்பொறி செல்வம், பாடகர்கள் காமராஜ், மணி, முகம்மத்அலி, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு உறுப்பினர் இம்ரான், ஆபிஸ், ஜாகிதா சரிப், திருப்பத்தூர் மாவட்ட மனித உரிமைகள் கழக மகளிரணி தலைவர் புனிதவள்ளி, துணைத்தலைவர் கலைவாணி, உறுப்பினர் வனிதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமின் பயனாளிகளாக இருந்து, மருத்துவ சேவைகளும், நலத்திட்ட உதவிகளும் பெற்றனர். பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் வரவேற்றனர்.
நமது தலைமை செய்தியாளர் – பசுபதி