Wed. Jul 23rd, 2025



சுரண்டை, மார்ச் 29:
தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தின் சாம்பவர்வடகரை கிளை SDPI கட்சி சார்பாக பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் SDPI கிளைத்தலைவர் S. மரைக்காயர் தலைமையில், WIM மாவட்டச் செயலாளர் சுலைகாள், SDPI தென்காசி தொகுதி இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், சுரண்டை நகர தலைவர் அப்பாஸ், நகரச் செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், WIM மாவட்ட பொதுச் செயலாளர் முபீனா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அரசியல், சமூக நலத்திட்டங்கள் மற்றும் ரமழான் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டு, மகளிர் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு பார்வைகள் பகிரப்பட்டன.

அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்

By TN NEWS