திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு
1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு.
திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி அதிகாலை 05.50 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரத்குமார் (27) என்பவரை போலீசார் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் குட்கா கைப்பற்றப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டது. மேற்படி பாரத்குமார் என்பவருக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூபாய் 25000 அபராதம் விதித்தனர்.
2). திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது.
திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கண்ட நிறுவனத்தில் விசாரணை செய்யப்பட்டதில் வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ராபின் ஹுசைன்(32) மற்றும் இஸ்ஹாக் அலி(25) ஆகிய இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக முறையான அனுமதி இல்லாமல் தங்கி வேலை செய்து வந்தது தெரிய வந்தது. மேற்படி ராபின் ஹுசைன் மற்றும் இஸ்ஹாக் அலி ஆகிய இரண்டு எதிரிகள் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் – சரவணக்குமார்