Sun. Jan 11th, 2026

ஆனைமலை, மார்ச் 21:

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது.

இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இவ்வாறு வேறு இடங்களில் கழிப்பிட வசதி தேடிச் செல்லும் நிலை அவர்களின் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உடனடி நடவடிக்கை வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை.

✅ பெண்கள் கழிப்பிடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
✅ மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
✅ சுகாதார அமைச்சக ‍‌அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

— நமது செய்தியாளர் முருகானந்தம், கோவை மாவட்டம்

By TN NEWS