Tue. Jul 22nd, 2025



நாகர்கோவில், மார்ச் 20:

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் (சென்னை) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு, சிட்டுக்குருவிகளுக்கு செயற்கை கூடுகள் வழங்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள மரங்களிலும் வீடுகளிலும் செயற்கை கூடுகள் தொங்கவிடப்பட்டன.

சிட்டுக்குருவிகள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் தங்களது வாழிடங்களை இழந்து வருவதால், அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமானது. இதை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளிலும் செயற்கை கூடு வழங்கி, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தை பரப்பும் திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைப்பினர் தெரிவித்தனர்.

“சிட்டுக்குருவிகள் ஒரு öகாலச்சின்னம்; அவற்றை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு” என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

— நமது செய்தியாளர்

By TN NEWS