Tue. Jul 22nd, 2025

திருப்பூர் பிப் 11,,

*திருப்பூர் பூலுவப்பட்டி செக்போஸ்ட் கிழக்கு சாலையில் கேட்பாரற்று நிற்கும் கார் பொதுமக்கள் அச்சம்.*

*மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.*

திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு செக்போஸ்ட் கிழக்கு நெருபெரிச்சல் சாலை கிழக்கு பகுதியிலுள்ள குளம் கோவில் அருகிலுள்ள சாலையில் கடந்த 20 நாட்களாக கேட்பாரற்ற நிலையில் கார்நிற்கின்றன.

அந்த கார்கள் 20 நாட்களாக அந்த பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து வருகின்றது

அந்த கார் நிற்கும் பகுதியில் சாலையில் வருகின்றவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும் மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது சாலையில் கேட்பாரற்று நிற்கும் காரை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் அந்த கார்கள் யாருடையது, எதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS