Tue. Jul 22nd, 2025

சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடி செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி கடந்த ஐந்து மாதங்களாக தனி செயல் அலுவலர் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பல்வேறுADMINISTRATIVEசேவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேரில் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க முடியாததால், முக்கிய பணிகள் நிலுவையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது அச்சன்புதூரில் செயல் அலுவலராக பணியாற்றும் மோகனமாரியம்மாள் கூடுதல் பொறுப்பாக சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கும் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால், இரண்டு பேரூராட்சிகளின் நிர்வாகமும் சரிவர செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் கடந்த 31.01.2025 அன்று செயல் அலுவலர் வந்ததாக கூறப்பட்டு, அதன்பிறகு அவர்கள் பணியில் ஆளில்லாத நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் செயல்படாமல் உள்ளன.

எனவே, சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடியாக தனி செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்.

By TN NEWS