Sun. Oct 5th, 2025

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பூட்டிய பொது கழிவறைகள் – பயணிகள் அவதி

நாகர்கோவில் ரயில் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தரும் முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது. ஆனால், இங்கு உள்ள பொது கழிவறைகள் பூட்டப்பட்டு இருப்பது பயணிகள், குறிப்பாக பெண்களுக்கு கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மையும் அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டிய நிலையத்தில், கழிவறைகள் பயன்பாட்டில் இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீர் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மு.சேக் முகைதீன்.

By TN NEWS