குடியாத்தம், ஜூன் 2:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புது ஆலியார் 2-வது தெருவில் வசித்து வரும் சலாவுதீன் – ஹமிதா தம்பதியரின் மகன் அபூநூஹான் (15), இன்று காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயம்.
தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அபூநூஹான் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை குடும்பத்தினர் குடியாத்தம் பாலாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் துயரத்தில்.
அபூநூஹான் 8-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு இடைநிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இதில் மூத்த சகோதரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
போலீசார் விசாரணை.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்