Wed. Jun 3rd, 2026

ஜூன் 5 முதல் துறைவாரியாக கலந்தாய்வு; 1,358 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

குடியாத்தம், ஜூன் 2:

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் வரும் ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இக்கல்லூரியில் முதலாமாண்டு சுழற்சி-I மற்றும் சுழற்சி-II பிரிவுகளுக்காக மொத்தம் 1,358 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. துறைவாரியான கலந்தாய்வு அட்டவணையை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

🔴ஜூன் 5: சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு

விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படை (NCC) சாதனையாளர்கள், மாற்றுத்திறனாளிகள், படைவீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

🔴ஜூன் 8: தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவுகள்

B.A. தமிழ் (Shift-I)

B.A. ஆங்கிலம் (Shift-I)

B.Sc. கணிதம் (Shift-I & II)


தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட மொழிப்பாடங்களில் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்றிருக்க வேண்டும். கணிதப் பிரிவிற்கு 200 முதல் 400 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

🔴ஜூன் 9: அறிவியல் பாடப்பிரிவுகள்

B.Sc. இயற்பியல்

B.Sc. வேதியியல்

B.Sc. தாவரவியல்

B.Sc. விலங்கியல்

B.Sc. கணினி அறிவியல்

BCA


ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் 200 முதல் 400 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்கள்.

🔴ஜூன் 10: வணிகவியல் மற்றும் நிர்வாகவியல்

B.Com (Shift-I & II)

BBA (Shift-I & II)


பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

🔴ஜூன் 11: வரலாறு மற்றும் பொருளியல்.

B.A. வரலாறு

B.A. பொருளியல்


பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களைத் தவிர்த்து, பிற பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 200-க்கும் மேல் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்:

1. இணையவழி பதிவு செய்த விண்ணப்பப் படிவம்


2. மாற்றுச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்)


3. 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்)


4. ஆதார் அட்டை


5. சாதி சான்றிதழ்


6. கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் – 2

கட்டண விலக்கு.

தகுதி மற்றும் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அசல் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பித்து சேர்க்கைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி முழு கட்டண விலக்கு வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS