Fri. May 22nd, 2026

கும்பகோணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி உறுதிமொழி.

கும்பகோணம், மே 21: முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. குமரன் தலைமையில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் நாட்டின் ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற நிலை மற்றும் அனைத்து மக்களின் நலனுக்காக உழைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் இளம் வயது பிரதமராகவும், நவீன இந்தியாவின் கனவாளராகவும் திகழ்ந்த ராஜீவ் காந்தியின் சிந்தனைகளைப் பின்பற்றுவதாகவும், அவரது கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாகவும் நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

இச்செய்தியை நிருபர் கோ. வளங்கோவன் தெரிவித்துள்ளார்.

By TN NEWS