Thu. May 21st, 2026

திருநெல்வேலி வள்ளியூர் துலுக்கர்பட்டி அரசுப் பள்ளியில் 100% தேர்ச்சி – மாணவர்கள் சாதனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், துலுக்கர்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% (நூறு விழுக்காடு) தேர்ச்சி!

✨ முதல் மூன்று இடங்கள்:

  • 🥇 ரோஷன் சஹானா – 489 மதிப்பெண்கள் (இரண்டு பாடங்களில் 100/100)
  • 🥈 ரோசிகா சஹானா – 488 மதிப்பெண்கள் (ஒரு பாடத்தில் 100/100)
  • 🥉 பால கன்சிகா – 483 மதிப்பெண்கள் (இரண்டு பாடங்களில் 100/100)

📚 பாடவாரியாக 100/100 மதிப்பெண்:

  • அறிவியல் (Science) – 7 மாணவர்கள்
  • சமூக அறிவியல் (Social Science) – 3 மாணவர்கள்

🙏 நன்றி:

துலுக்கர்பட்டி ஊர் மக்கள் சார்பாகவும், ஒன்றிய கவுன்சிலர் S. ரைகானா ஜாவித் அவர்கள் சார்பாகவும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

🎉 தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் சார்பாகவும், இணை ஆசிரியர் திரு. ஷேக் முஹைதீன் அவர்கள் சார்பிலும் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் வாழ்த்துக்கள்!

#துலுக்கர்பட்டி #100PercentSuccess #TamilnaduToday

ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS