Sun. Apr 26th, 2026

தமிழ்நாட்டின் வரை படத்தையே மாற்றி, தமிழ் ஊர்களின் பெயர்களைத் தெலுங்கில் மாற்றிய மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழறிஞர் மு.வரதராசனார் (மு.வ) வாழ்வில் நடந்த ஒரு நிஜ சம்பவமே இந்தக் கசப்பான உண்மைக்குச் சாட்சி.

பச்சூரில் இறங்கி, மாமுடிமான பல்லி தேடிய மு.வ!

ஒருமுறை பெங்களூருக்குச் செல்லும் ரயிலில் ஏறிய மு.வ, ஜோலார்பேட்டையை அடுத்த ‘பச்சூர்’ நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்தவர்களிடம், “மாமுடிமான பல்லிக்கு எப்படிப் போகணும்?” என்று கேட்டார். ஆனால், அந்த ஊர் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை – ரயில்வே மாஸ்டருக்கும் இல்லை.

கடைசியில் ஒருவர் சொன்னார்: “அது ‘வெள்ளையக் கவுண்டனூர்’ ஆச்சே! ‘மாமுடிமான பல்லி’ன்னா யாருக்கும் தெரியாது.”

நண்பர் வீட்டில் திறந்த உண்மையின் கதவு.

நண்பர் வீட்டுக்குச் சென்றதும் மு.வ-வுக்கு வெளிச்சம் கிடைத்தது. அந்த ஊர் மக்களுக்கே தங்கள் ஊரின் பெயர் ‘மாமுடிமான பல்லி’ என்பது தெரியாதாம்! பத்திரப்பதிவு அலுவலகத்திலும், தபால் நிலையத்திலும் மட்டுமே தெலுங்குப் பெயர் புழக்கத்தில் இருந்தது. மு.வ-வின் நண்பருக்குக் கூட, சொத்துப் பிரிவினைப் போதுதான் இந்த மாற்றப்பட்ட பெயர் தெரியவந்ததாம்.

சதிக்குத் துணை போன பொப்பிலி அரசர்.

1932–36 காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த ‘பொப்பிலி அரசர்’ (ராவு ஸ்வச்சல்லபதி ராம்கிருஷ்ணா ரங்காராவ்) என்பவரே இந்தச் சூழ்ச்சிக்குக் காரணம்.

1911 வரை வடவேங்கடம் வரை பரவியிருந்தது தமிழகம். ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காகத் திருத்தணி, சித்தூர், திருப்பதி போன்றவற்றை இணைத்துப் புதிய ‘சித்தூர்’ மாவட்டத்தை உருவாக்கினார்கள். அப்போது “விசால ஆந்திரம்” கேட்டுப் போராடிய தெலுங்கர்கள், சித்தூரை ஆந்திராவுடன் இணைக்கத் துடித்தனர்.

இதற்குத் துணைபோன பொப்பிலி அரசர், குப்பம் தாலுகாவில் உள்ள தமிழ்க் கிராமங்களைச் சித்தூருடன் இணைப்பதற்காக, அந்த ஊர்களின் பெயர்களை அரசு ஆவணங்களில் தெலுங்குப் பெயர்களாக மாற்றினார்!

உதாரணமாக: மாற்றப்பட்ட சில ஊர்ப் பெயர்கள் – இதோ!

பழைய தமிழ்ப் பெயர் ⏩. மாற்றப்பட்ட தெலுங்குப் பெயர்
பச்சூர் .                      ⏩    பந்தார பல்லி
பழையனூர்.          ⏩     அதன கவுனி பல்லி
புதூர்  .                       ⏩       கொண்ட சிந்தன பல்லி
கட்காவூர் .                ⏩      கொத்தூர்
பழைய பேட்டை   ⏩        ஜயந்தி புரம்
கோமுட்டியூர்           ⏩       பய்யப்ப நாயனு பேட்டே
வலாரிப்பட்டி          ⏩         நல்ல கதிரன பல்லி

மு.வ-வின் வேதனை.

இதையெல்லாம் கேட்டு மனம் வெதும்பிய மு.வ, தனது ‘மொழிப்பற்று’ நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“இந்தப் பெயர்களை வைக்கத் துணிந்தவர்களின் வீரத்தைப் பாராட்டுவதா, அல்லது அவர்களின் துணிவுக்கு இடம் தந்த தமிழரின் தாராள மனப்பான்மையைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.”

தமிழர்களின் நிலம் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோனது என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வே ஒரு பெரும் சாட்சி.

நூல் ஆதாரம்: ‘மொழிப்பற்று’ – மு.வரதராசனார்

உங்கள் ஊரின் பழைய பெயர் என்ன?

உங்கள் ஊருக்கும் இப்படி ஏதாவது மாற்றப்பட்ட பெயர் இருக்கிறதா? அல்லது மருவி வேறு பெயரில் அழைக்கப்படுகிறதா?

#TamilHistory #TamilNadu #MuVaradarajan #HiddenHistory #Mozhippattu #JournalIST Mullai Shaikh #EveryoneSolo #EveryoneFollowers


ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS