Thu. Apr 23rd, 2026

3 மணி நிலவரம் – தமிழ்நாடு வாக்குப்பதிவு: அன்றும்… இன்றும்…

தமிழ்நாடு (234) சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு கண்டுள்ளது.

2021 தேர்தல்: 53.35%
2026 தேர்தல் (மாலை 3 மணி நிலவரம்): 70.00%

இதன்படி, கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 16.65% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருவது இந்த உயர்வுக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுவது, இந்த முறை தேர்தல் மீது மக்களின் ஈடுபாடு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது.

ஜனநாயக திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த தேர்தலில், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்

By TN NEWS