Thu. Apr 16th, 2026

வாக்குச் சாவடிகளுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு முறையை பாதுகாக்கவும், வாக்குச்சாவடிக்குள் ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

📵 ஏன் இந்தத் தடை?

வாக்களிக்கும் அறையில் புகைப்படம்/வீடியோ எடுப்பதைத் தடுக்க

ரகசிய வாக்கெடுப்பு (Secret Ballot) முறையை பாதுகாக்க

தேவையற்ற அழைப்புகள் மூலம் பணியாளர்களின் கவனம் சிதறாமல் இருக்க

வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலையாக வெளியிடுவதைத் தடுக்கும்


🎟️ டோக்கன் முறை எப்படி செயல்படும்?

நுழைவாயிலில் தனி மையம் அமைக்கப்படும்

வாக்காளரின் செல்போன் பாதுகாப்பு பையில் (Pouch) வைக்கப்படும்

அதற்கான அடையாளமாக ஒரு டோக்கன் வழங்கப்படும்

வாக்களித்த பின், டோக்கன் ஒப்படைத்து செல்போன் திரும்ப பெறலாம்


வாக்காளர்களுக்கு அறிவுரை.

முடிந்தவரை செல்போன்களை வீட்டிலேயே விட்டு வரவும்

அவசியம் கொண்டுவர வேண்டுமானால், ‘Silent’ நிலையில் வைத்திருக்கவும்

தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்கவும்


🗳️ ஜனநாயகத்தின் நெறிமுறையை காக்கும் முக்கிய நடவடிக்கை இது.


ஷேக் முகைதீன்.

By TN NEWS