Sun. Apr 12th, 2026

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திரு. பாரி தாக்கல் செய்த வேட்புமனு முறையாக நிரப்பப்படாத காரணத்தால், தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடாக அவரது தந்தை திரு. நெடுஞ்செழியன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த குளறுபடி கட்சியினரிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிதம்பரம் நகர இணைச் செயலாளர் திரு. சரண்ராஜ், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு அப்பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சிவக்குமார்
சிதம்பரம்

By TN NEWS