வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சியில், திராவிட மாடல் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி திமுக சார்பில் மாபெரும் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.
அணைக்கட்டு மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சியின் பல்வேறு வார்டுகளில், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் A.P. நந்தகுமார், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, திமுக அரசின் பல்வேறு சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்வில்,
மாவட்டப் பெருந்தலைவர் திரு. மு. பாபு,
அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செயலாளர் திரு. பி. வெங்கடேசன்,
பள்ளிகொண்டா பேரூர் செயலாளர் திரு. ஜாகீர் உசேன்,
பேரூர் தலைவர் திருமதி சுபபிரியா குமரன்,
துணைத் தலைவர் திரு. வசீம் அக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
செய்தியாளர்: தி. தென்பாண்டியன், வேலூர் மாவட்டம்