Mon. Apr 6th, 2026

செஞ்சி, ஏப்ரல் 5:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூரில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்திற்கு முன்பாக, தேவனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயிலில் அவர் வழிபாடு செய்தார். மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேவனூர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் சமத்தகுப்பம், சித்தேரி, கெங்கபுரம், சிறுதலைப்பூண்டி, வளத்தி, கன்னலம் உள்ளிட்ட கிராமங்களிலும் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண் தத்தன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.ஆர். பிரித்விராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சுகன்ராஜ், தேவனூர் மணி, சித்தேரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாமக நிர்வாகிகள் அன்பழகன், அருண்மொழிதேவன், ஜெயகுமார், ஜே.பி. முருகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, நீலகண்டன், சந்திரசேகர், கண்ணன் மற்றும் பாஜக நிர்வாகி துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தி வழங்கியவர்:
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் கே. மாரி

By TN NEWS