குடியாத்தம், ஏப்ரல் 5:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனித்தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன், வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில்,
“தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால், முதியோர்களுக்கு மாதம் ரூ.2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ் வழங்கப்படும். பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான ஒதுக்கீடு 7.5% இலிருந்து 10% ஆக உயர்த்தப்படும். மேலும் மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை கட்டுப்படுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி குடியாத்தம் கங்கை அம்மன் ஆலயம், கோபாலபுரம், நடுப்பேட்டை, சுண்ணாம்பு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர், நகரக் கழக செயலாளர் ஜே.கே.என். பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் அமுதா கருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், எஸ். சேட்டு, ஜே. பாஸ்கர், எஸ்.ஏ. ஜெயமணி பாபு, இ.டி. பாஸ்கர், கே.வி. ராஜேந்திரன், கிஷோர், கோணி இராமமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சுகுமார், மஞ்சுநாதன், மணிகண்டன், ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி வழங்கியவர்:
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்