Sat. Apr 4th, 2026

வேலூர்,

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 046–குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (03.04.2026) காலை 11.00 மணி முதல் நடைபெற்ற இந்தக் கூட்டம், தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலை பராமரிப்பு, வாக்காளர்கள் சீரான முறையில் வாக்களிக்க தேவையான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில், தேர்தல் நடத்தும் அலுவலரும் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலரும், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல காவல் அலுவலர்கள், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகர மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர்கள், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.

வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS