Sat. Apr 4th, 2026

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் பரிதா புருஷோத்தமன் அவர்கள், இன்று நகரப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, செதுக்கரை பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயம் ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, 13வது வார்டு ராஜிப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் காட்பாடி ரோடு, எம்.ஜி.ஆர் நகர், துப்புரவு காலனி, ஆசிரியர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார்.

இந்த பிரச்சார நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர், நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி, மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா மூர்த்தி, அமுதா, சிவபிரகாசம், முன்னாள் நகர செயலாளர் சேவல் நித்தியானந்தம், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் துணைத் தலைவர் மோகன்ராஜ், நகர துணை செயலாளர்கள் அமுதா, கருணா, கே.வி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS