விழுப்புரம் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை
விழுப்புரம்:
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திரு.வி.க சாலையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மிரட்டல் செய்தியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பெயர்கள் மாறி மாறி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தபால் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் குண்டு நீக்கம் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மிரட்டல் குறித்து முழுமையான விவரங்களை அதிகாரிகள் வெளியிடாத நிலையில், இது உண்மையான அச்சுறுத்தலா அல்லது போலி மிரட்டலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவாளர்:
கே. மாரி
விழுப்புரம் மாவட்டம்