திண்டுக்கல், மார்ச் 25:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி சாலையில், யூனியன் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கண்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரூ.4,68,000 பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட தலைமை கிரைம் ரிப்போர்ட்டர் சந்திர மோகன்.