Thu. Mar 19th, 2026

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம் துவக்கம்.
விழுப்புரம் | மார்ச் 19

விழுப்புரத்தில் உள்ள இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “இ.எஸ். செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த மையம், கல்லூரியின் கூட்டாண்மை நிறுவனமான இ.எஸ்.எஸ்.எம் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் திறன் பயிற்சி வழங்குதல், புதுமை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நிஜ வாழ்க்கை தேவைகளுக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்குவதற்கான செயல்முறை தளமாக இந்த மையம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் பொறியாளர் செல்வமணி தலைமை தாங்கினார். அமெரிக்காவில் உள்ள எஸ்.கே.சி.ஐ.டி சோல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனர் வெங்க நாக முரளி கோனடம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

பொறியியல் கல்லூரி முதல்வர் இந்திரா, மையத்தின் நோக்கங்கள் மற்றும் பணிக் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.

மேலும், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் மற்றும் இ.எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர்: கே. மாரி, விழுப்புரம்.

By TN NEWS