திண்டுக்கல் | மார்ச்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், படங்கள், விளம்பர பலகைகள் ஆகியவை மறைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபயிலான கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கந்த சஷ்டி கவசம் அடங்கிய கல்வெட்டுகள் பணியாளர்களால் மறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோயிலில் திருப்பணி செய்த உபயதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் பகுதியில் உள்ள இந்து முன்னணி மற்றும் பா.ஜா.க. உறுப்பினர்கள் கோயிலில் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம் மற்றும் உபயதாரர்களின் பெயர்களை மூடியிருந்த பேப்பர்களை அகற்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்ற சம்பவங்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களில் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சித்திரபிரகாஷ்.