Wed. May 6th, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் முதல் இ.பி.காலனி வரை உள்ள சாலையில் தேர்தல் பாதுகாப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தணிக்கை நடவடிக்கைகள் முறையாக நடைபெறுகிறதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையா என்பதையும் அவர் கண்காணித்தார்.

இந்த ஆய்வின்போது திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. கோ. பழனிவேல், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு. செந்தில்முருகன், திண்டுக்கல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. சுல்தான் சிக்கந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராமர்

By TN NEWS