நத்தம், மார்ச்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை நடைபெறும் விழாவிற்காக நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டதாக நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த வள்ளி மற்றும் விராலிமலை பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் நகை மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நத்தம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்