Sat. Feb 28th, 2026

அவசர அடிப்படை வசதிகள் குறித்து மாமன்ற உறுப்பினர் ச. கணேசன் வலியுறுத்தல்.

Dindigul: பிப். 27 அன்று நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் ச. கணேசன் பல்வேறு அவசர தேவைகள் குறித்து கவன ஈர்ப்பு செய்தார்.

முதலில், திண்டுக்கல் மாநகருக்கு மிகவும் அவசியமான புறநகர் பேருந்து நிலையத்தை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் அடைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், 2வது வார்டு செவலியசிவாஜிநகர் மற்றும் வள்ளாளர்நகர் பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண மேயரும் அதிகாரிகளும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதோடு, வேடப்பட்டி மின் தகன மேடையை உடனடியாக பழுது பார்க்க வேண்டும் எனவும், 2வது வார்டு ஆர்.எம். காலனி பகுதியில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல், ஆர்.எம். காலனி பஸ் நிறுத்தத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்காத நிலை உள்ளதால், அந்தப் பணியை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்

By TN NEWS